×

ஹரப்பா நாகரீகத்தை அடையாளப்படுத்தும்பால் பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்திட ஒன்றிய அரசிடம், என்னென்ன திட்டங்கள் உள்ளன?.. மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி

சென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மக்களவையில், பால்பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்தவும், கால்நடைகளை குறிப்பிட்டு கண்டறியும் வகையிலும்,  ஒன்றிய அரசிடம், ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? என்றும், அதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? என்றும் ஒன்றிய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

அதற்கு ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா,’கடந்த செப்டம்பர் 2020ல், ஈ-கோபாலா என்ற செயலி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் கால்நடைப் பெருக்கத்திற்கான தரமான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கால்நடைகளை நோயில் இருந்து பாதுகாப்பதற்காகவும், அவைகளுக்குத் தரமான உணவுகள் கிடைப்பதற்காகவும், உரிய காலத்தில் தடுப்பூசி அளிக்கவும், இந்த செயலி பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஈ-கோபாலா செயலியின் உதவியால், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும், பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும்,  விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும்.

தேசிய கால்நடைகள் நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. 16 கோடிக்கும் அதிகமான எருமை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கால்நடைகள் பதிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில், கால்நடைகளுக்கான தரவுகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது’ என பதில் அளித்துள்ளார்.

Tags : Union Government ,Harabba ,R. Palu M. B , What are the plans of the Union Government to improve the management of the farm by identifying the Harappan civilization? .. DR Balu MP Question in the Lok Sabha
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...