×

இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது :அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேட்டி

டெல்லி : உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் சக்திமிகுந்த தலைவர்களில் ஒருவரான பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர், முதன்முறையாக அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.   

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தொடரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இந்தோ - பசிபிக் ஒப்பந்தம் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்டனி பிளிங்கன், “இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது குடும்பத்துடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தேன். டெல்லியில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது.கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் தடுப்பூசி கூட்டாண்மையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படும்,என்றார்.


Tags : United States ,India ,US Secretary of State ,Anthony Blinken , வெளியுறவுத்துறை
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து