×

யாஸ் புயலின் தாக்கம்: கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்  மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் புதன்கிழமை வரும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
யாஸ் புயல் வரும் 26 ஆம் தேதி கிழக்கு கடற்கரையில் ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கேரளாவுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை எதுவும் விதிக்கப்படவில்லை.  யாஸ் புயல் காரணமாக தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

The post யாஸ் புயலின் தாக்கம்: கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Yas ,Kerala ,India Meteorological Centre ,Delhi ,Indian Meteorological Centre ,Dinakaran ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...