கல்லூரி மாணவிகளுக்கு கஞ்சா சப்ளை: கொச்சியில் 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதையொட்டி கஞ்சா, போதை பொருள் கடத்தல் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கடத்தலை தடுக்க கலால்துறை, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கலால்துறையினர் ரயில்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஆந்திரா வழியாக வந்த ரயிலில் சோதனை நடத்தியபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் 2 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களது பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் ஆலப்புழாவை சேர்ந்த கிரிதர், ஜெயகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.  

இவர்களது செல்போனை பரிசோதித்த போது கொச்சியை சேர்ந்த ஏராளமான மாடல் அழகிககள் மற்றும் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களும், தொடர்பு எண்களும் இருந்தன. மேலும், அவர்கள் கஞ்சா வேண்டும் என தகவல் அனுப்பி இருந்தனர். தொடர் விசாரணையில், இவர்கள் இருவரும் கொச்சியில் உள்ள மாடல் அழகிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>