×

ராகுல் டிராவிட் இருக்கும் போது இந்திய அணிக்கு பயம் ஏது?.. எந்த தடைகளையும் இந்திய அணி தகர்க்கும்: இன்சமாம் உல் ஹக் பேச்சு

இஸ்லாமாபாத்: இந்தியா அளித்த உதவிகளை மறக்க மாட்டோம்: அமெரிக்கா இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. ஆனால், பயிற்சியின் போது இந்திய வீரர்கள் ஷுப்மான் கில், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர். உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டு இதில் ஷூப்மான் கில் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார்.

இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தனர். இந்த 3 வீரர்களுக்குப் பதிலாக எந்த 3 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ வாரியம் ஆலோசித்து வந்தநிலையில் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள தவண் தலைமையிலான இந்திய அணியிலிருந்து 3 வீரர்களை இலங்கை அனுப்ப பிசிசிஐ வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த 3 பேருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா இருவரும் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர கேப்டன் கோலியும் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறார், ரஹானேவும் தொடைப்பகுதி தசைப்பிடிப்பால் இருக்கிறார். இதனால் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து உடற்தகுதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் ஒன்றில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர்; இங்கிலாந்து பயணத்தில் இந்திய வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதைப் போலத்தான் ஆஸ்திரேலியத் தொடரிலும் பல வீர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அதை இந்திய அணியின் திறமையான, இளம் வீரர்கள் அருமையாகச் சமாளித்து தொடரை வென்றது. இங்கிலாந்து தொடரில் ஷுப்மான் கில், விராட் கோலி, ரஹானே ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கவலைப்படுகிறார்கள். காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்பட வேண்டும். முன்னாள் வீரர் திராவிட் பயிற்சியில் ஏராளமான திறமையான வீரர்கள் உருவாகி வருகிறார்கள்.

அவரால்தான் இந்திய அணியின் பெஞ்ச் வலிமை அதிகரித்து வருகிறது. திறமையான இளம் வீரர்களை உருவாக்கித் தருவதற்கு திராவிட் இருக்கும் போது வீரர்கள் காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்பட வேண்டும். சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் இலங்கையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர், இங்கிலாந்துக்கும் செல்ல இருக்கிறார்கள். ஆதலால் காயத்தை நினைத்து இந்திய அணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சூழலுக்கு ஏற்றார்போல் இளம் வீரர்கள் இந்திய அணியில் உருவாகி, தயாராகி, அனுபவம் வாய்ந்த வீரர்களைப் போல் விளையாடுவார்கள். எந்த தடைகளிலும் இந்திய அணி மீண்டுவரும், அதற்கு அதிகமான பங்களிப்பு ராகுல் திராவிட்டையே சேரும் என கூறினார்.


Tags : Indian ,Rahul Dravid ,Inzamam-ul-Haq , What is the fear of the Indian team when there is Rahul Dravid?
× RELATED 100வது டெஸ்டில் அவர் பேசியதை...