அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்குகிறார் அதானி : பணமோசடி புகார்களுக்கு உள்ளான 4 மொரிஷீயஸ் நிறுவனங்களில் ரூ.51,360 கோடி முதலீடு!!

மும்பை : பணமோசடி புகார்களுக்கு உள்ளான 4 மொரிஷீயஸ் நிறுவனங்களில் ரூ.51,360 கோடி அளவிற்கு அதானியின் முதலீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. Elara India Opportunities Fund, Cresta Fund, Albula Investment Fund மற்றும் APMS Investment Fund ஆகிய 4 முதலீட்டு நிறுவனங்களும் மொரிஷீயஸ் நாட்டில் இருந்து இயங்கி வருகின்றன.இதில் 2 நிறுவனங்கள் பணமோசடி புகார்களிலும் 1 நிறுவனம் வங்கிக்கடன் மோசடியிலும் சிக்கி உள்ளது. மற்றொரு நிறுவனம் எத்தியோப்பிய அரசால் தடை செய்யப்பட்டவையாகும். இந்த 4 நிறுவனங்களின் மொத்த முதலீடுகளில் 90% அளவிற்கு அதானியின் முதலீடுகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனங்களின் 51,360 கோடி ரூபாய் அதானியின் முதலீடு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக முதலீடுகளை ஈர்க்கும் விதமாக வியக்கவைக்கும் வரிச்சலுகை, முதலீட்டாளர்களின் அடையாளங்களை மறைக்கும் வசதிகள் என மொரிஷீயஸ் சட்டத் திட்டங்கள் அமைந்து இருப்பது அதானியின் முதலீடுகளுக்கு சாதகமாக அமைந்து இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை, செபி அமைப்புகள்அதானி நிறுவனங்களில் சோதனை நடத்திய நிலையில், புதிய சர்ச்சையில் அதானி குழுமம் சிக்கியுள்ளது.   

Related Stories:

>