வெள்ளாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும்-மாட்டுவண்டி உரிமையாளர்கள் கோரிக்கை

அரியலூர் : செந்துறை அருகே வெள்ளாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்டுவண்டி உரிமையாளர்கள் நலசங்க சிறப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ்.மாத்தூரில் அசாவீரன்குடிகாடு மாட்டுவண்டி உரிமையாளர் நலசங்கத்தின் சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தலைவர் ரவி தலைமை வகித்தார். பிரபாகரன் வரவேற்றார், செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பாலசிங்கம் தீர்மானம் குறித்து கூறுகையில், மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய வகையில் அரசு உடனடியாக தளவாய் வடக்கு சிலுப்பனூர், சேந்தமங்கலம் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அசாவீரன்குடிகாடு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரியலூர் மாவட்ட காவல்துறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அசாவீரன்குடிக்காடு மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே அரசு மாட்டுவண்டி தொழிலாளர்களை அரசு நல வாரியத்தில் சேர்ந்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

More
>