மு.க.ஸ்டாலின், கருணாநிதியை வரைந்த கல்லூரி மாணவர் 300 கிலோ நெல்லால் அப்துல்கலாம் உருவத்தை வடிவமைத்து சாதனை

பெரம்பலூர் : 3 ஆயிரம் முத்தங்களைக் கொண்டு மு.க.ஸ்டாலினையும், 40 ஆயிரம் எழுத்துக்களைக் கொண்டு கருணாநிதியை வரைந்த கல்லூரி மாணவர்.நேற்று 300கிலோ நெல்லைக் கொண்டு அப்துல் கலாமை வடிவமைத்தார்.பெரம்பலூர் மாவட்டம், வே ப்பந்தட்டை தாலுகா, வா லிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் நரசிம்மன்(20).இவர் கோவை அருகேயுள்ள தனி யார் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் 5ஆண்டு படிப்பான கட்டிடஎழிலியல் பட்ட வகுப் பில் 3ம்ஆண்டு படித்து வருகிறார்.

பெயிண்ட்டிங் வரைவதில் மிகுந்த ஆர்வமுள்ள நரசிம்மன் அதில் எதையாவது புதுமையாக வரைந்துசாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் ஏற்கனவே, 10க்கு 12 அளவில், தஞ்சை பெரிய கோயிலை துணியில் தத்ரூபமாக வரைந்துள்ளார். பிறகு ஏ-3 அளவுள்ள வெள்ளைத் தாளில் அப்துல்கலாம் படத் தை பிரஸ் இல்லாமல் மூக்கால் தொட்டுத்தொட்டு வ ரைந்து பலரையும் வியக்க வைத்துள்ளார்.

செமஸ்டர் எக்ஸாம் முடித்து விடுமுறையில் வாலிகண்ட புரத்திற்கு வந்த நரசிம்மன் கடந்த 12ம்தேதி இண்டியன் புக் ஆப் ரெக்கார்டுக்காக புதிய சாதனை படைக்க அங்குள்ள பெருமாள் கோயில்அருகே 16அடி உயரமும், 8.5அடி அகலமும் கொண்ட காடா துணியில் பெயிண்டைத் தனது உதடுகளால் தொட்டுத்தொட்டு 3ஆயிரம் முறை முத்தமிட்டு 3 மணி நேரத்திற்குள், முதல்வர் மு. க.ஸ்டாலின் சிரித்த முகத்தை வரைந்து சாதனை படைத்தார். ஜூலை 23ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவத்தை அவர் எழுதிய குறளோவியத்திலிருந்து 215வரிகளில் உள்ள 40ஆயிரம்எழுத்துக்களைக் கொண்டு, 4 நாட்களில் கருணாநிதி உருவத்தை வரை ந்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று(27ம் தேதி) வாலிகண்டபுரம் தனியார் நெற்களத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி 30 அடி நீளம், 30அடி அகலமுள்ள வெண்ணிற டிஜிட்டல் பேன ரில், 300கிலோ நெல்லைக் கொட்டி பிரமாண்ட அப்துல் கலாம் உருவத்தை வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளார். இந்தச்சாதனையை காலை 11.45 மணிக்கு தொடங்கி 2.30 மணிக்கு என 2.45மணி நேரத்தில் செய்துமுடித்தார். சாதனை படைத்த நரசிம்மனுக்கு திமுக மாவட்டப் பொருளா ளர் ரவிச்சந்திரன், விஏஓ நல்லுசாமி, திமுக கிளைச் செயலாளர் உதயமன்னன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தனது சாதனைபற்றி நரசிம்மன் தெரிவித்ததாவது :வரைந்த 2.45 மணிநேர வீடி யோ காப்பி புதுடெல்லி இ ண்டியன் புக் ஆப் ரெக்கார் டு நிறுவனத்திற்கு அனுப் பிவைத்து இன்னும் 3நாளி ல் அங்கிகரித்து சாதனை யாக ஏற்கப்பட்டதற்கான சா ன்றிதழ் ஆன்லைன் மூலம் எனக்கு அனுப்பிவைப்பார்கள். சாதனைக்காக மட்டு மே இந்தஓவியத்தை வரைந்தேன் எனத்தெரிவித்தார்.

Related Stories:

More
>