சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. குறித்து அவதூறாக பேசிய சி.வி.சண்முகத்தை கண்டித்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்..!!

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து சிதம்பரத்தில் அந்த பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அண்ணாமலை பல்கலைக் கழகம் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசினார் என்பது புகார்.

இதனை கண்டித்து சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.வி.சண்முகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உலகத்தரம் வாய்ந்த அண்ணாமலை பல்கலைக் கழகம் குறித்து அவதூறான பேச்சை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். சி.வி.சண்முகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழக பதிவாளரிடமும் ஊழியர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். தமிழ்நாடு அரசு சி.வி.சண்முகத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: