திண்டுக்கல் மாநகராட்சியில் குப்பையை தரம் பிரித்து வழங்கும் மக்கள்-விழிப்புணர்வுக்கு நல்ல பலன் கிடைத்தது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி பகுதியை  குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி  ஆணையாளர் சிவசுப்பிரமணியன் உத்தரவுப்படி கடந்த ஒரு வாரகாலமாக தூய்மை  பணியாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து வழங்க வேண்டும்  என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

அதன்பலனாக பொதுமக்கள்  தங்கள் வீடுகளிலே குப்பைகளை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து சேகரிக்க  துவங்கி விட்டனர். வீட்டு வாசல்களில் வைத்திருக்கும் இவற்றை தினசரி காலை 6  மணி முதல் 9 மணி வரை தூய்மை பணியாளர்கள் சேகரித்து செல்கின்றனர். இதேபோல்  வணிக நிறுவனங்களிலும் இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இச்செயலை  தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள், வணிகர்களின்  ஒத்துழைப்பு இல்லையென்றால் குப்பையில்லா நகராக மாற்ற முடியாது என்றும்  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>