×

பந்தலூர் அருகே காயங்களுடன் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

*தொழிலாளர்கள் சிதறி ஓட்டம்

பந்தலூர் :  பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலைத்தோட்டம் பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை ஒன்று கிடந்தது. இது குறித்து  வனத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.  பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம்  கொளப்பள்ளி டேன்டீ  சரகம் ஒன்று பகுதியில் நேற்று காலை தொழிலாளர்கள் தேயிலை பறிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டதும் தொழிலாளர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். தொழிலாளர்கள் இது குறித்து டேன்டீ  அதிகாரிகள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 சேரம்பாடி  வனவர் சசிகுமார், வன காப்பாளர் கிருபானந்தகுமார் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். அதனை கண்காணித்தபோது சிறுத்தை அசைவற்று கிடந்தது. அருகில் சென்று பார்த்தபோது சிறுத்தை இறந்துவிட்டது தெரியவந்தது.

சிறுத்தையை சோதனை செய்தபோது  அதற்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இறந்த சிறுத்தை 2 வயதுள்ள பெண் சிறுத்தை ஆகும். விலங்குகள் மோதலில் சிறுத்தை இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டார்.  உடற்கூராய்வுக்குப்பின் சிறுத்தை இறப்பு குறித்து தெரியவரும்.

சம்பவ இடத்திற்கு முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி  வந்து பார்வையிட்டார்.  தேயிலைத்தோட்டங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்த டேன்டீ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Tags : Pandharpur , Bandakur, Leopard,Tea Estate
× RELATED பந்தலூர் பஜாரில் சாலையில்...