தீவிரவாத தாக்குலில் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் யுத்த பூமியில் சாதித்து காட்டிய நீச்சல் வீரர் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத்!!

பாக்தாத்: ஈராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள மொசூல் நகரில் 2014ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பினர் நிகழ்த்திய கார் வெடி குண்டு தாக்குதலில் ஒற்றை காலை இழந்தவர் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத். தலைசிறந்த தொழிற்முறை கால்பந்து வீரர் ஆக வேண்டும் என்ற கனவு மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத் அவர்களுக்கு 17 வயதிலேயே சிதைந்து போனது. வெடிகுண்டு தாக்குதலில் ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத அவர், நீச்சல் பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கினார்.

உள்ளூர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்த மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத், 2018ல் ஈராக்கில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2ம் இடம் பிடித்து அசத்தினார். தன்னம்பிக்கையுடன் வெற்றி நடை போடும் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத், சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிகளை குவித்து ஈராக் கொடியை சுமந்துச் செல்ல வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது என்கிறார். உலகின் தலை சிறந்த நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் தான் தமக்கு பிடித்த வீரர் என்று கூறும் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத், அவருக்கு அடுத்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தமது கனவு என்கிறார். பயங்காராத தாக்குதலில் காலை இழந்த போதிலும் அதோடு முடங்கி விடாமல், சாதனை படைத்தது மற்ற இளைஞர்களுக்கு முன் உதாரணமாகி இருக்கிறார் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத்.

Related Stories: