கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் காட்டுயானையால் வாழைகள் நாசம்

கொடைக்கானல் : கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் புகுந்த காட்டுயானை, வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில் அஞ்சுவீடு, பேத்துப்பாறை, பாச்சலூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. அவரை, பலா, வாழை, காபி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், இப்பகுதி விளைநிலங்களில் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் யானைகள் தாக்கி இப்பகுதியில் சிலர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் அஞ்சுவீடு பகுதியில் நுழைந்த காட்டுயானை ஒன்று இங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தி சென்றது.

 இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியிலே யானை முகாமிட்டுள்ளதால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>