விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த தண்டரை கிராமத்தில் உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மாதிரி வயல் விவசாய உபகரணங்களின் தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு 110 விவசாயிகளுக்கு ரூ.1000 மதிப்பிலான மாதிரி வயல் விவசாய உபகரணங்களின் தொகுப்பினை வழங்கி, வாழ்த்தி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் சுந்தரராமன் வடிவேலு உட்பட விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>