சறுக்கினார் சரத் கமல்

ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் அசந்தா சரத் கமல் (39 வயது), நடப்பு உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான மா லாங்குடன் (32 வயது) நேற்று மோதினார். மா லாங் 11-7 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற, 2வது செட்டில் சிறப்பாக விளையாடிய சரத் கமல் 11-8 என வென்று பதிலடி கொடுத்தார். கடும் போராட்டமான அமைந்த 3வது செட்டில் 13-11 என்ற கணக்கில் வென்ற மா லாங், அடுத்த 2 செட்களையும் 11-4, 11-4 என எளிதாகக் கைப்பற்றி 4-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 46 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாம்பியன் வீரருக்கு எதிராக ஒரே ஒரு செட்டை கைப்பற்றிய திருப்தியுடன் சரத் கமல் விடை பெற்றார். ஏற்கனவே மனிகா பத்ரா, சத்யன், சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தோல்வியைத் தழுவிய நிலையில், சரத் கமலும் வெளியேறியது டேபிள் டென்னிசில் இந்தியாவின் பதக்க கனவை முழுவதுமாகக் கலைத்தது.

Related Stories:

>