மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் நிர்வாக குழு கூட்டம் கடந்த 25ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிர்வாக குழுவில் மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, அருண் அழகப்பன், சதுரங்கா காந்த்ராஜ், தேவநாதன் யாதவ், கலியப்பெருமாள், லட்சுமணன், பால் அந்தோணி, ராமசாமி, ரமேஷ் ரங்கராஜன், ரவி, ரஞ்சித் ஜேசுதாசன், செந்தில்நாதன் ஆகிய 12 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அபூர்வ வர்மா, ஜோதி நிர்மலாசாமி, குமார் ஜெயந்த், எஸ்.கே.பிரபாகர் ஆகிய 4 அரசு பிரதிநிதிகளும் உள்ளனர்.

இக்கூட்டத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தலைவராக எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும், முத்தையா, அருண் அழகப்பன், சதுரங்கா காந்த்ராஜ், தேவநாதன் யாதவ், எம்.ரவி, ரமேஷ் ரங்கராஜன், ஐஏஎஸ் அதிகாரிகள் அபூர்வா வர்மா, ஜோதி நிர்மலா சாமி, குமார் ஜெயந்த், எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் ஸ்டெவர்டாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், மேல்முறையீட்டு குழுவின் சேர்மனாக பால் அந்தோணி மற்றும் குழு உறுப்பினர்களாக லட்சுமணன், ராமசாமி, ரஞ்சித் ஜேசுதாசன், முத்துக்கருப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 23ம் தேதி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாக தேவநாதன் யாதவ், பால் அந்தோனி, ரவி, ரஞ்சித் ஜேசுதாசன் ஆகியோர் நிமியக்கப்பட்டனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>