×

13 நாட்கள் நடக்கிறது இந்திய - ரஷ்ய ராணுவம் மாபெரும் கூட்டு பயிற்சி

புதுடெல்லி: இந்தியா ராணுவம் மற்றும் ரஷ்யா ராணுவ வீரர்கள் இணைந்து 13 நாட்கள் மெகா ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனர். ‘இந்திரா 2021’ என்ற பெயரில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை இது நடைபெறும். இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ரஷ்யாவின் வோல்கோகார்ட்டில் பயிற்சி நடைபெறும். இந்த கூட்டுப் பயிற்சி, இருநாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை  மேலும் பலப்படுத்தும் ஒரு மைல்கல் நிகழ்வாகும். ‘இந்த கூட்டு ராணுவ பயிற்சி, இருநாட்டுக்கும் இருக்கும் நீண்ட கால நட்பின் பிணைப்பை வலுப்படுத்தும்,’ என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு எதிரான, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Indo-Russian Army, Joint Exercise
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...