இந்தாண்டுக்குள் 35 ரபேல் இந்தியாவிடம் ஒப்படைப்பு: பிரான்ஸ் தகவல்

புதுடெல்லி: இந்திய விமானப்படையை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.58 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அனைத்து விமானங்களும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டது. முதல் கட்டமாக கடந்தாண்டு ஜூலை 29ம் தேதி 5 விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. தொடர்ந்து, நவம்பரில் 3 விமானங்கள், இந்தாண்டு ஜனவரி 27ல் 3 விமானங்கள், கடந்த 21ம் தேதி 3 விமானங்கள் என மொத்த 7 கட்டங்களாக இதுவரை 24 விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரான்சிடம் இருந்து இதுவரை 26 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 24 விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. 2 விமானங்கள் பிரான்சில் ஐ.ஏ.எப் பைலட் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், ஒரே ஒரு விமானம் மட்டும் அடுத்த ஆண்டு ஜனவரியிலும் ஒப்படைக்கப்படும் என பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.

Related Stories: