×

தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழினத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர்களுக்கு வருடந்தோறும், ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த விருதிற்கான விருதாளரை தேர்வு செய்யும் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சம் காசோலையும், பாராட்டு சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thakaisal Tamil Award: Government of Tamil Nadu Announcement
× RELATED ஆதம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை