சென்னை தலைமை செயலகத்தில் கார் தீடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: தலைமை செயலகத்தில் கார் தீடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை  தலைமை செயலகத்தின் புனித ஜார்ஜ் கோட்டையின் பின்பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த கார் தீடீரென தீப்பற்றி அதிகளவில் புகை வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரின் முன்பக்கம் எரிந்து சேதமான நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் அந்த கார் சென்னை  தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கார் என தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் ஒரு வேலை எது சதிவேலையாக இருக்குமோ என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் போலீசாரின் விசாரணைக்கு பின்னர் தான் முழு தகவலும் தெரியவரும்.

Related Stories:

More
>