டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு: கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தல்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். மேற்குவங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று  பிரதமர் மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டி நிதி குறித்து கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பின் குடியரசு தலைவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 

மம்தா பானர்ஜி  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது. நேற்று மாநில அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மம்தா பானர்ஜி விமானம் மூலம் டெல்லி சென்றார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

Related Stories:

>