×

விராலிமலை அருகே கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.: அதிமுக நிர்வாகி ஆக்கிரமிப்பு செய்ததாக கோயில் பூசாரி புகார்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தை அதிமுக நிர்வாகி ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கோயில் பூசாரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விராலிமலை அருகே பொத்தம்பட்டியில் உள்ள கறுப்பர் கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தை அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவர் ஆக்கிரமித்ததாக கூறி கோயில் பூசாரி ராசு என்பவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்தார்.

தகவல் அறிந்து வந்த விராலிமலை போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் வாருவாய்துறையினரும் ராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர் கீழே இறங்கிவந்தார்.

பின்னர் ஆக்கிரமிப்பு இடத்து சென்ற போலீசார் மற்றும் வாருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இடத்தை காலி செய்யமாறு அதிமுக நிர்வாகி சுதாகரிடம் தெரிவித்தனர். இடத்தை காலி செய்ய மறுத்த சுதாகரின் மனைவி மற்றும் அவரது மகள்கள் தரையில் அமர்ந்து கதறி அழுதனர்.

அப்போது ஒரு மகள் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிகொள்ளப்போவதாக விரட்டல் விடுத்தார். இதனால் அந்த இடம் முழுவதும் பதற்றமாக இருந்தது. 4 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருமாறு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். 


Tags : Viralimai , Occupancy of temple land near Viralimalai: Temple priest complains of AIADMK occupation
× RELATED விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 3 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு