மாதவரம் பால் பண்ணை அருகே தந்தையுடன் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் மெக்கானிக் கைது

புழல்: சென்னை அடுத்த கொடுங்கையூர் பகுதி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் யாம்நாத் குமார் (26). இவர் மாதவரம் பால்பண்ணை கே.கே.தாழை பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், அதே பகுதியைச் சேர்ந்ந்த  ரங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்  வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக ரங்கா வேலைக்கு செல்லவில்லையாம். இந்நிலையில் நேற்று காலை ரங்கா  அவரது 13 வயது மகளுடன் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, அவர்களை வழிமறித்த மெக்கானிக் யாம்நாத் குமார், உங்க அப்பா ஏன் வேலைக்கு வரவில்லை என கேட்டதுடன்,  சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். 

இதுகுறித்து சிறுமியின் தாய் புழலில் உள்ள மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியிடம் மெக்கானிக் யாம்நாத் தவறான எண்ணத்துடன் சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், யாம்நாத்தை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Related Stories:

More
>