தொழில் போட்டியால் கஞ்சா வியாபாரிகள் ஆயுதங்களுடன் மோதல்: ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை வடபழனியை சேர்ந்தவர் பார்த்திபன்(40). இவர் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். பார்த்திபனுக்கும் கஞ்சா வியாபாரம் செய்யும் கும்பலுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் இறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பார்த்திபன் தரப்பை சேர்ந்தவர்கள் பூக்கடை பகுதியை சேர்ந்த கார்த்திக்(29) தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ேநற்று இரவு வடபழனியில் கஞ்சா விற்பனை செய்வதில் மோதல் ஏற்பட்டது. அப்போது பார்த்திபனை கார்த்திக் தரப்பினர் பயங்கர  ஆயுதம் மற்றும் கத்தியால் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடபழனி போலீசாா் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்திபனை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மோதல் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இதற்கிடையே பார்த்திபனை வெட்டிய கஞ்சா வியாபாரி கும்பலை சேர்ந்த கார்த்திக், மதுரவாயல் பகுதியை சேர்ந்த ராமாபுரம் கைக்கேல்(29), கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த காத்திகேயன்(27) ஆகியோர் காவல் நியைத்தில் சரணடைந்தனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வடபழனியில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபனை வெட்டியதாக தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேஷ் மற்றும் சசிகுமார் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories:

>