அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வருகிற 2ம் தேதி வரை நெல் மூட்டைகள் எடுத்து வர வேண்டாம்-விவசாயிகளுக்கு கண்காணிப்பாளர் வேண்டுகோள்

ராணிப்பேட்டை :  அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வருகிற 2ம்தேதி வரை நெல் மூட்டைகளை எடுத்து வர வேண்டாம் என்று விவசாயிகளுக்கு கண்காணிப்பாளர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளில்  எடுத்து வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.

இதனால், ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 நெல் மூட்டைகள் வரை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இருப்பினும், 8 வேளாண் விற்பனை பரிவர்த்தனை கூடங்கள், ஒரு கிடங்கு என மொத்தம் 9 வேளாண் விற்பனை கூடங்களில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் ஸ்டாக்கில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் நெல் மூட்டைகள் வைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வருகிற ஆகஸ்ட் 2ம்தேதி வரை நெல் மூட்டைகளை எடுத்து வர வேண்டாம் என விற்பனை கூட கண்காணிப்பாளர் பழனி நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>