கம்போடியா நாட்டு தமிழ் சங்கத்துடன் சிவகாசி ஏஜே கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிவகாசி : சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி தமிழ்த்துறையும், கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் அசோக் தலைமையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கம்போடியா நாட்டின் அங்கோர் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ்வரன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்மொழி, முதுகலை தமிழ்த்துறை தலைவர் சிவனேசன், கல்லூரி தொழில் நிறுவன இணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

கம்போடியா நாட்டு தமிழ் சங்கம் முன்னெடுக்கும் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய நிகழ்வுகளில் கல்லூரி மாணவர்கள் பங்கு பெறவும் இண்டன்ஷிப் எனப்படும் பயில் நிலை பயிற்சியினை, மாணவர்கள் கம்போடியா நாடு சென்று மேற்கொள்ளும் நோக்கிலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>