×

திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு ரூ.12 கோடி நலத்திட்ட உதவி-கலெக்டர் காயத்ரி, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினர்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் ஆயிரத்து 551 பயனாளிகளுக்கு ரூ 12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் வழங்கினர்.திருவாரூர் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.11 கோடியே 98 லட்சத்து 31 ஆயிரத்து 294 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசியதாவது, ஓட்டுமொத்த தமிழக மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்த அரசின் முக்கிய குறிக்கோளாக கொண்டு திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 551 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.5 கோடியே 97 லட்சமும், ரூ.5 கோடியே 97 லட்சத்து 81 ஆயிரத்து 744 மதிப்பிலான தாலிக்கு தங்கம் என மொத்தம் ரூ.11 கோடியே 94 லட்சத்து 81 ஆயிரத்து 744 மதிப்பிலான உதவி வழங்கப்பட்டது.

மேலும் 75 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம் பெறும் திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 550 மதிப்பிலான தையல் இயந்திரமும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டையுடன் கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையாக 7 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 14 ஆயிரம் என மொத்தம் ரூ. 11 கோடியே 98 லட்சத்து 31 ஆயிரத்து 294 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ சிதம்பரம், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழுத்தலைவர் தேவா, ஆர்டிஓ பாலசந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, கண்காணிப்பாளர் தேவகுமார், பழனியாண்டவர் திருக்கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur District Social Welfare Department ,Collector-Gayatri ,MLA ,Boondi Kalaivanan , Thiruvarur: On behalf of the Thiruvarur District Social Welfare Department, the Collector has provided welfare assistance worth Rs. 12 crore to 1,551 beneficiaries.
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...