×

பிரதமர், உள்துறை அமைச்சரை ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் சந்திக்க என்ன காரணம் உள்ளாட்சித் தேர்தலா? சசிகலா விவகாரமா?

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில் அமித்ஷாவுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். சசிகலா விவகாரம் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன் தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், உள்ளிட்டோர் உடன் சென்றனர். ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரை மட்டுமே பிரதமர் தனியாக சந்தித்து பேசினார். அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் தமிழக அரசின் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 


பிரதமருடனான சந்திப்பில் தடுப்பூசி, மேகதாது அணைப்பிரச்சைனை, சாலைகள் அமைப்பது, மீனவர்கள் தாக்கப்படுவதற்கு தீர்வு உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார். உள்துறை அமைச்சருடன் சந்திப்பு இல்லை, ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் என நேற்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் தோல்விக்கு பின் உள்துறையுடம் நடக்கும் முதல் சந்திப்பு ஆகும். 



Tags : OBS ,EPS , Home Minister OBS, EPS, Meeting
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி