×

உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார் அமித்ஷா என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அசாம்-மிசோரம் எல்லையில் நடந்த மோதலில் அசாமை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய  விரும்புகிறேன் என ராகுல் காந்தி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது என கூறினார். குலிசெர்ராவின் எல்லையோர பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


அசாம் - மிசோரம் எல்லையில் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 காவலர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குலிசெர்ராவின் எல்லையோர பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை அமைதி மற்றும் புரிந்துணர்வு சூழ்நிலையில் தீர்க்கப்பட வேண்டும் என்று மிசோரம் அரசு கூறியிருற்தது. சர்ச்சைக்கு அமைதியான தீர்வு காண ஒரு இணக்கமான சூழலை உருவாக்க அசாம் அரசுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்திரந்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் தலையீட்டால், அசாம் காவல்துறை அந்த இடத்திலிருந்து விலகியதோடு, அந்த பணி  சிஆர்பிஎஃப் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 



Tags : Home Minister ,Rahul Gandhi , Home Minister hatred, distrust, failure, Rahul Gandhi
× RELATED வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா