×

1000 ஆண்டுகள் இல்லாத மழை, நிலச்சரிவுகள், சூறாவளிகள். 350 அடி உயர மணல் புயல்: சீனாவை சின்னாபின்னமாக்கிய அடுத்தடுத்த இயற்கை பேரிடர்கள்!!

பெய்ஜிங் : சீனாவை அடுத்தடுத்து இயற்கை பேரிடர்கள் தாக்கி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாகவே கனமழை, நிலச்சரிவுகள், சூறாவளி, மணல் புயல் என அடுத்தடுத்த இயற்கை பேரிடர்கள் தாக்கியுள்ளது.1000 ஆண்டுகள் சந்தித்திராத மிக பலத்த மழையை சீனா கடந்த வாரம் எதிர்கொண்டது. பல இடங்களில் ஏற்பட்ட மேகவெடிப்புகளால் 5 நாட்கள் கடந்தும் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில் திடீரென உருவான இன்ஃபா என்ற சூறாவளி நிலைமையை மேலும் மோசமசெய்துள்ளது.

சுழன்று அடித்த சூறாவளியில் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்து காண்போரை அச்சுறுத்தின. இதனிடையே வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்ட ஹெனான் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் வடமேற்கு சீனாவில் டன்ஹுவாங் நகரத்தை சுமார் 350 அடி உயரமுள்ள மணற் புயல் தாக்கி உள்ளது.

இதனால் சுமார் 5 நிமிடம் நகரம் முழுவதுமே இருளில் மூழ்கியது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர். கடந்த 25ம் தேதி வீசிய இந்த மணல் புயல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. மணல் புயலால் பெருமளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என்ற போதும் தண்ஹுவாங் நகரில் உள்ள வீடுகள் முழுவதையும் மணல் சூழ்ந்தது.


Tags : China , இயற்கை பேரிடர்கள்
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...