ஜெயலலிதா தேர்தலில் தோற்று இருந்தால் 300 பேர் தற்கொலை செய்திருப்பார்கள் : அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேச்சால் சர்ச்சை!!

பரமக்குடி : ஜெயலலிதா தேர்தலில் தோற்று இருந்தால் 300 பேர் தற்கொலை செய்திருப்பார்கள், தற்போது அதிமுக தோல்வி அடைந்தும் யாராவது தற்கொலை செய்து கொண்டார்களா என அக்கட்சியின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, ஜெயலலிதா சிறை சென்ற போது, 200 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்கள் என்று கூறிய அன்வர் ராஜா, தற்போது அதிமுக தோல்வி அடைந்ததில் ஒருவர் கூட தற்கொலை செய்யாதது ஏன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை அதிமுகவினர் மறைத்ததாலையே படுதோல்வி அடைந்தோம் என்று அன்வர் ராஜா கூறியுள்ளார். ஜெயலிலதா உயிரோடு இருந்த போதிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட அன்வர் ராஜா, ஆனால் தற்போது அதிமுகவின் படுதோல்வி குறித்து ஒருவர் கூட கவலைப்பட கொள்ளவில்லை என்று தெரிவித்தார். 

Related Stories:

>