ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி: லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினார்கள்.

ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த நிமிடத்தில் ருபிந்தர்பால் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்தியா 2-0 என முதலிடம் முன்னிலை பெற்றது. 2-வது மற்றும் 3-வது காலிறுதி பகுதி ஆட்டங்களில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 4-வது காலிறுதி ஆட்டத்தில் ருபிந்தர் பால் சிங் (51) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-0 என ஸ்பெயினை வீழ்த்தியது. இந்திய ஹாக்கி அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: