×

ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரை கடக்கும் யாஸ் புயல்..! ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தது. அதன் படி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. யாஸ் புயல் வரும் 26-ஆம் தேதி ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரை கடக்கும்.புயல் கரையை கடக்கும் போது 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலால் ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் ஜார்க்கிராம், மேதினிபூர், பர்தமான், கொல்கத்தா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், யாஸ் புயல் காரணமாக நாகை – காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே போல, ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. யாஸ் புயல் மீட்பு பணிக்காக 606 மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். நிவாரண பொருட்கள் மற்றும் மீட்புப் பணி தளவாடங்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரை கடக்கும் யாஸ் புயல்..! ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Cyclone Yas ,Odisha ,West Bengal ,Rameswaram Pampan port ,Rameswaram ,Middle East Bay of Bengal ,
× RELATED தமிழகத்தில் வெப்ப அலை வீசும்; மஞ்சள்...