மின்வாரிய நிதிச்சுமையை போக்க தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்பு ெபாருளாதார மண்டலத்தில் மின் கம்பிகள் கொண்டு செல்வது தொடர்பான மின்பகிர்மான கழகத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த  நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும், தொழில் துறையும் இணைந்து செயல்பட்டால் தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு இன்றி தொழில்துறையில் வளர்ச்சி இருக்காது.

மத்திய எரிசக்தி துறையின் தற்போதைய அறிக்கையின்படி, நாட்டிலுள்ள 41 மின் சக்தி நிறுவனங்களில் தமிழகத்தின் மின்பகிர்மானக் கழகம் 39வது இடத்தில் உள்ளது. 0 முதல் 20 புள்ளிகள் பெற்றுள்ளதால் சி கிரேடில் உள்ளது. இந்த அறிக்கையை தமிழக மின்பகிர்மான கழகம் ஒரு எச்சரிக்கையாக கருத வேண்டும்.வாரியத்தின் நிதிச்சுமையை குறைக்க, சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் வாரியம் உள்ளது. இந்த சூழலில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories:

>