×

நாடு முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி:கார்கில் வெற்றி தினம்

புதுடெல்லி: கார்கில் போரின் 22ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர். கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஆக்கிரமித்தது. அவர்களை விரட்ட ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் கார்கில் போர் சுமார் 3 மாதங்கள் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் 500க்கும் அதிகமான வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். .  இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. 22ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். லடாக்கின் டிராஸில் உள்ள கார்கில் போர் வீரர்கள் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இங்கு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை நிலவிய மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா டாகர் போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டு உயர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘நாடு தனது வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் நினைவில் கொள்கிறது.

அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு நாளும் நம்மைத் தூண்டுகிறது’ என அஞ்சலி செலுத்தினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த மகத்தான தியாகத்திற்காக மரியாதை செலுத்துகிறேன்’ என கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘நம்முடைய மூவர்ணத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொரு வீரர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. நாட்டின்  பாதுகாப்பிற்காக  மகத்தான தியாகத்தை செய்த உங்களையும், உங்கள்  குடும்பத்தினரின் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். ஜெய் ஹிந்த்’ என அஞ்சலி செலுத்தினார்.

Tags : Kargil Victory Day , Kargil, Victory Day
× RELATED திருவேற்காடு கல்லூரியில் கார்கில் வெற்றி தின விழா கொண்டாட்டம்