விவசாயிகளுக்கான தேசிய அளவிலான 3 நாட்கள் இணையவழி காணொலி கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உழவர் பயிற்சி மைய தலைவர் சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்வதற்கான மேலாண்மை முறைகள் குறித்து தேசிய அளவிலான 3 நாட்கள் இணையவழி காணொலி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையம், ‘‘செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் முயல் வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்வதற்கான மேலாண்மை முறைகள்” என்ற தேசிய அளவிலான இணையவழி காணொலி கருத்தரங்கை இன்று முதல் 29 ம் தேதி வரை நடத்த உள்ளது.

இதில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள், செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் முயல்களிலன் இறைச்சியில் இருந்து இறைச்சி பொருட்கள் தயாரித்தல் பற்றிய புதிய தொழில்நுட்பங்கள், இறப்பு பரிசோதனையில் நாம் கவனிக்க வேண்டியவை,  பொருளாதாரம், விற்பனை வாய்ப்புகள், கால்நடை வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் பேச உள்ளார்கள். இந்த கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்ள பதிவு கட்டணமாக 200 செலுத்த வேண்டும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஏனாத்தூர் உழவர் பயிற்சி மைய பேராசிரியர் சி.சௌந்தரராஜனை 9500563853 மற்றும் 8825784259 என்ற எண்களிலும், உதவி பேராசிரியர் ரா.கோபி 7530052315 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

>