காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட காவலர்களுக்கு முதற்கட்ட உடல்தகுதி தேர்வு: ஆகஸ்ட் 3 வரை நடக்கிறது

சென்னை: தமிழக காவல்துறையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2020ம் ஆண்டுக்கான தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்தாண்டு இறுதியில் நடந்தது. இதில் தேர்வான 3028 பேருக்கு உடல் தகுதி தேர்வு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. இதில் அனுமதி நுழைவு சீட்டில் குறிப்பிட்ட அழைப்பு நாட்களுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து அதன் அறிக்கையை வைத்திருந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அரங்கு முழுவதும் சிசிடிவி மூலம் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து, காவலர் தேர்வு நடைபெறும் இடத்தை எஸ்பி சுதாகர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்ட உடல் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 2 மற்றும் 3ம் தேதி பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதைதொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. அதில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.

Related Stories:

More
>