திமுக கிளை செயலாளர் செங்கல்லால் தாக்கி கொலை‌

குன்னூர்: நீலகிரி மாவட்டம் அப்பர் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (68). திமுக கிளை செயலாளர். இவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் முத்துக்குமார் (65). இருவரும் வீட்டையொட்டி காய்கறி கடை நடத்தி வந்துள்ளனர். இதனால் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று‌ இரவு நடராஜனை முத்துக்குமார் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பர் குன்னூர் போலீசார் வழக்கு பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Related Stories:

>