×

குமரியில் 67 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்திற்கு 17 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மதுரையில் இருந்து இதனை சுகாதார பணியாளர்கள் எடுத்து வந்தனர். இதனை கொண்டு இன்று (26ம் தேதி) மாவட்டம் முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு 18 முதல் 44 வயதினருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செலுத்தப்படுகிறது. 18 முதல் 44 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்லைன் முறையிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேரடி டோக்கன் முறையிலும் செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம்துறை, குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, கோதநல்லூர், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் டதி மகளிர் மேல்நிலை பள்ளி, இந்து கல்லூரி ஆகிய 11 இடங்களில் நடத்தப்படுகிறது.

கோவிஷீல்டு 18 முதல் 44 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேரடி டோக்கன் வாயிலாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு தடிக்காரன்கோணம், அருமநல்லூர், ஆரல்வாய்மொழி, தோவாளை, அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், சிங்களயேர்புரி, கணபதிபுரம், வெள்ளிச்சந்தை, நடுவூர்க்கரை, முட்டம், குளச்சல், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, முன்சிறை, தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, பத்துகாணி, மேல்புறம், களியக்காவிளை, பளுகல், கண்ணனூர், திருவட்டார், பேச்சிப்பாறை, சுருளோடு, திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஓலவிளை, பத்மநாபபுரம் ஆகிய 32 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்படுகிறது.

18 முதல் 44 வயதினருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு 9 முதல் 1 மணி வரை நேரடி டோக்கன் வாயிலாக பூதப்பாண்டி, குளச்சல், சேனம்விளை, கன்னியாகுமரி, அருமனை, குலசேகரம், கருங்கல், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைகள், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பெருவிளை அரசு மேல்நிலை பள்ளி, வடிவீஸ்வரம் அரசு பள்ளி, ஏழகரம் அரசு உயர்நிலை பள்ளி, பூச்சிவிளாகம் அரசு தொடக்க பள்ளி, ஆசாரிபள்ளம் சாலை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களிலும், அழகியபாண்டியபுரம் அரசு தொடக்க பள்ளி,

சேரமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி, வடக்கு குண்டல் அரசு தொடக்க பள்ளி, பொழிக்கரை புனித மேரி நடுநிலை பள்ளி, திக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி, புத்தன்கடை புனித ஜோசப் நடுநிலை பள்ளி, விரிகோடு அரசு தொடக்க பள்ளி, வாறுதட்டு எம்.எம்.கே உயர்நிலை பள்ளி, கஞ்சிக்குழி அரசு தொடக்க பள்ளி ஆகிய 22 இடங்கள் என்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 67 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags : Corona vaccination ,Kumari , Corona vaccination camp at 67 locations in Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...