×

காஞ்சிபுரம் நகர் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள வணிக வளாகங்கள் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகர், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி சந்தை மதிப்புள்ள வணிக வளாகங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி இன்று 26.07.2021 சென்னை கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை  காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 1970 சதுரஅடி வணிக வளாகத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை மாநகரில், பிரதான சாலையில் அமைந்துள்ள விலை மதிப்புள்ள நிலங்கள் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜீன் மாதம் 15ம் தேதி 33 கிரவுண்ட் விலை மதிப்புமிக்க இடம் தனியார் கல்வி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்டு தற்போது திருக்கோயில் பெயரில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இடங்களை திருக்கோயிலின் எவ்வித அனுமதியின்றி ஸ்ரீகண்டன் என்பவர் 1399 சதுரஅடி, சுரியநாராயணன் 112 சதுரஅடி, பி.டி.அபுபக்கர் 459 சதுரஅடி ஆகமொத்தம் 1970 சதுரஅடி இடத்தை வணிக வளாகம் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன்கீழ் நடவடிக்கை எடுத்து திருக்கோயிலால் சுவாதீனம் பெறப்பட்டது. இந்நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.5  கோடியாகும். இதேபோல் சென்னை நகரின் பிரதான சாலையில் உள்ள மற்ற நிலங்களை திருக்கோயில் மூலம் சுவாதீனம் பெறப்பட்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.கே.மோகன் திரு. தயாகம் கவி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திரு. ஜெயராமன், சென்னை மண்டல உதவி ஆணையர் திருமதி கவேனிதா, காஞ்சிபுரம் மண்டல உதவி ஆணையர் திருமதி ஜெயா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Arulmigu Ekambaranathar Temple ,Kanchipuram , Kanchipuram Nagar Arulmigu Ekambaranathar temple property worth Rs 5 crore recovered
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்