மகளை காதலித்தவனை கொன்று ‘அந்த’ உறுப்பை துண்டித்த பெற்றோர்: பீகாரில் பயங்கரம்

பாட்னா: பீகாரில் மகளை காதலித்தவனை கொன்று, அவனது ஆணுறுப்பை துண்டித்த பெற்றோர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் அடுத்த ரெபுரா ராம்புர்ஷா கிராமத்தை சேர்ந்தே சவுரப் குமார் (18) என்ற இளைஞன், அதேபகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் சவுரப் குமாரை பலமுறை கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பெண்ணின் பெற்றோர், சவுரப் குமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். தங்களது மகளை அடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சில உறவினர்களுடன் சேர்ந்து சவுரப் குமாரை அடித்து உதைத்தது மட்டுமின்றி, அவரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அந்த இளைஞனை, அப்பகுதியினர் மீது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சவுரப் குமார் இறந்தார். இச்சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முசாபர்பூர் போலீஸ் எஸ்பி ராஜேஷ் குமார் கூறுகையில், ‘காதல் விவகாரத்தால் பெண்ணின் பெற்றோரால் சவுரப் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது ஆணுறுப்புதுண்டிக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டால்தான் உடலின் மற்ற பாகங்களில் உள்ள காயங்களின் விபரங்கள் தெரியவரும். இந்தவிஷயத்தில் தொடர்புடைய சுஷாந்த் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories:

>