நெருக்கடியில் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் : தொலைத்தொடர்பு உரிமம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என தகவல்

மும்பை : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு உரிமம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 20 தோலை தொடர்பு உரிமங்கள் ஜூலை 19ம் தேதியுடன் காலாவதியானது. வருவாய் இழப்புகளை எதிர்கொண்டுள்ள அந்த நிறுவனம், மீண்டும் உரிய கட்டணம் செலுத்தி உரிமத்தை இன்னும் புதுப்பிக்கவில்லை.

இந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி 10 நாட்கள் அவகாசம் பெற்றது. வரும் 29ம் தேதியுடன் காலக்கெடு முடியும் நிலையில், உரிமத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபடவில்லை எனக்கூறப்படுகிறது.

எனவே காலக்கெடு முடிந்த பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்ப தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகும் உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

Related Stories:

More