சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம்: சேலம் மாவட்டம் மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் 17 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை கிளை செயலாளர் வசந்தகுமார்(27) ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். பின்னர், அந்த சிறுமியிடம் நெருக்கமாக இருந்ததால், சிறுமியை கர்ப்பமாகி விட்டார். இந்நிலையில் சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்ட பெற்றோர் விசாரித்தபோது, வசந்தகுமார் ஆசை வார்த்தை கூறி பலமுறை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததும், இதனால் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கெண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில்  போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வசந்தகுமார் சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சிறுமியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் அவர் கர்ப்பமானதால், கருவை கலைக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அதிமுக பிரமுகர் வசந்தகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories:

>