×

தமிழகத்தில் திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயமுத்தூர், நீலகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை.

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி , திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

வருகின்ற 28ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி , திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, வடக்கு கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் ,அந்தமான் கடல் பகுதி, வட மேற்கு வங்க கடல் பகுதி, தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dindigul ,Tenkasi ,Tamil Nadu ,Meteorological Department , Districts including Dindigul and Tenkasi in Tamil Nadu are likely to receive showers for 5 days till the 30th: Meteorological Department
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...