×

கம்பம்மெட்டு சாலையில் ‘குவி கண்ணாடி’ மிஸ்சிங்-வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

கம்பம் : கம்பம்மெட்டு சாலையில் பழுதடைந்த குவி கண்ணாடியை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் முச்சந்திப்பு, நாற்சந்திப்பு மற்றும் மலைச்சாலை வளைவுகளில் வாகன விபத்து ஏற்படாத வகையில், பக்கவாட்டு மற்றும் எதிரெதிர் திசைகளில் வரும் வாகனங்களை காட்டுவதற்காக ‘கான்வெக்ஸ் மிர்ரர்’ (குவி கண்ணாடி) அமைப்பர். தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, ஹைவேவிஸ் மலைச்சாலைகள், மாவட்ட நெடுங்சாலையின் முக்கிய சந்திப்புகளில் குவி கண்ணாடி (கான்வெக்ஸ் மிரர்) பொருத்தப்பட்டுள்ளன. கம்பத்திலிருந்து கம்பமெட்டு செல்லும் 13 கிலோ மீட்டர் தூர சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

 இதில், 5வது வளைவில் இருந்து 14 இடங்களில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கான்வெக்ஸ் மிரர் (குவி கன்ணாடி) பொருத்தப்பட்டுள்ளது. இதனால், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 9வது மற்றும் 13வது வளைவில் கான்வெக்ஸ் மிரர் சேதமடைந்து கண்ணாடி இல்லாமல் போர்டு மட்டுமே உள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 9வது மற்றும் 13வது வளைவுகளில் குவி கண்ணாடி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kammetu Road , Pillar: Motorists have demanded that the faulty windshield on the pole be replaced.
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...