×

தேசிய விருதுபெற்ற நடிகை ஜெயந்தி மறைவு கன்னட திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!: குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல்..!!

டெல்லி: பழம்பெரும் நடிகை ஜெயந்தி மறைவுக்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 76. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நீர்க்குழி, பாமா விஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். குறிப்பாக 60 மற்றும் 70களில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கன்னட சினிமா ரசிகர்களால் ‘அபிநய சாரதா’ என்று அழைக்கப்படும் ஜெயந்தி இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட அரசின் ஏழு விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூருவில் வசித்து வந்த இவர், உடல்நல குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை திடீரென மோசமடைந்து அவர் இன்று இயற்கை எய்தினார். நடிகை ஜெயந்தியின் மறைவுக்கு தென்னிந்திய திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பழம்பெரும் நடிகை ஜெயந்தி மறைவுக்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை ஜெயந்தியின் மறைவுச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தேசிய விருதுபெற்ற நடிகை ஜெயந்தி மறைவு கன்னட திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Jayanthi ,Vice President ,Venkaiah Naidu , Actress Jayanthi, Maraivu, Kannada Movie, Venkaiah Naidu
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...