×

விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

டெல்லி : விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜந்தர் மந்தர் மைதானத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி சிவப்பு நிற டிராக்டர் ஓட்டி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் பேரணியாக சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இதில் கலந்து கொண்டனர். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் டிராக்டர் வாகனத்தில் அமர்ந்திருந்தனர். அத்துடன் கட்சியின் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி அந்த வாகனத்தை சுற்றி நின்றனர்.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். விவசாயிகள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் தான் பேச வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. வேளாண் சட்டங்கள் ஓரிரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே உதவுவதாக அமைந்துள்ளது. அதனை எதிர்க்கும் வகையில் விவசாயிகளை அடையாளப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்துள்ளேன்,என கூறினார்.

Tags : Rahul Gandhi ,Parliament , ராகுல் காந்தி
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...