கோவையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து பெண் காவலர் பணியிட மாற்றம்

கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து பெண் காவலர் பாப்பாத்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தியவரிடம் காவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை அடுத்து பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு காவல் ஆணையர் மாற்றியுள்ளார்.

Related Stories:

>