×

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் சிவகிரியில் 167 பயனாளிகளுக்கு ரூ.16.14 லட்சம் நலத்திட்ட உதவிகள்-தென்காசி கலெக்டர் வழங்கினார்

சிவகிரி : வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தனுஷ்குமார் எம்பி, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். கலெக்டர் கோபாலசுந்தரராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் தொகுதியில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்து 167 பயனாளிகளுக்கு ரூ.16.14 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா 3ம் அலை பரவ வாய்ப்புள்ளதால் 18 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

வருவாய்த்துறையின் சார்பில் 47 முதியோர்களுக்கும், 23 விதவைகளுக்கும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட இருவருக்கும், 24 முதிர்கன்னிகளுக்கும், 15 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகையும், 3 பேருக்கு திருமண உதவித்தொகை, 7 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 3 பேருக்கு இலவச தையல் இயந்திரம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 25 பேருக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் 4 பேருக்கு வீடு பழுது பார்க்கவும் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூ.16,14,270 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஷிலா, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜமனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, சிவகிரி தாசில்தார் ஆனந்த், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  செல்லத்துரை, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு  பொன் முத்தையாபாண்டியன், தெற்கு பூசைப்பாண்டியன், பேரூர் செயலாளர்கள் டாக்டர் செண்பகவிநாயகம், சரவணன், நகர செயலாளர் ராஜகாந்த், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மனோகரன், பூமிநாதன், சேகர்,

வீரமணி, மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேல், மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், புளியங்குடி சாகுல்ஹமீது, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் மாடசாமி, நல்லசிவன், முத்தையா, ஒன்றியபொறுப்புகுழு உறுப்பினர்கள் மாரித்துரை, கட்டபொம்மன், செல்வராஜ், ஒன்றிய தொழிலாளரணி கார்த்திக், இளைஞரணிகள் முனீஸ்வரன், கந்தவேல், புல்லட் கணேசன் துணை தாசில்தார்கள் சண்முகத்தாய், செல்வகுமார், சரவணன், கருத்தபாண்டியன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, வேலம்மாள், சிவகிரி பேரூராட்சி  நிர்வாக அலுவலர் அரசப்பன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Chief Minister ,Sivagiri ,Collector , Sivagiri: In the first phase under the Chief Minister's scheme in your constituency in Sivagiri under Vasudevanallur Assembly constituency
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...