தி.மலையில் வலுக்கும் அதிமுக உட்கட்சி மோதல்!: மாவட்ட செயலாளர் மீது முன்னாள் அமைச்சர் அடுக்கடுக்கான புகார்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சருக்கும், அதிமுக மாவட்ட செயலாளருக்கும் இடையே உட்கட்சி மோதல் முற்றி வருவதாக கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். செய்யாறில் நடைபெற்ற அதிமுக-வின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைக்கவில்லை என்பது புகாராகும். மாவட்ட செயலாளர் தூசி மோகன் தன்னை புறக்கணிப்பது குறித்து கட்சியின் தலைமைக்கு புகார் தெரிவிக்க உள்ளதாக முக்கூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூசி மோகன் தன்னிச்சையாக செயல்படுவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட செயலாளர் தூசி மோகனிடம் கேட்ட போது நடந்து முடிந்த தேர்தலில் தமக்கு எதிராக முக்கூர் சுப்பிரமணியன் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். தாம் தேர்தலில் வெற்றி பெறாததற்கு அவர் தான் காரணம் என்று கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளதாக தூசி மோகன் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>